திங்கள், 8 செப்டம்பர், 2008

தூது

ஆதவனின் தூது வெந்கதிறாய் பனித்துளிக்கு !
ஆழ்கடலின் தூது பனிமலையாய் காற்றுக்கு !

விடியலின் தூது செந்நிறமாய் இரவுக்கு !
விரிந்த வானின் தூது மழைத்துளியாய் விளைநிலத்துக்கு !

பழந்தமிழின் தூது இலக்கியமாய் உயர்புலவர்க்கு !
பால்நிலவின் தூது வெள்ளொளியாய் இருளுக்கு !

இயற்கையின் தூது இயற்கையாய் இயற்கைக்கு !
இங்கு எவரின் தூது எதுவாய் எவருக்கு!?!

1 கருத்து:

Goush சொன்னது…

கலகிடிங்க புவனா....
அடி கள்ளி ...யாருக்கு இந்த தூது...