வெள்ளி, 21 நவம்பர், 2008

STC12-A

கண்களின் நேர் பார்வையில்
வானம் பூமியின் சமரசம் !
அங்கு மிதக்க பிறக்கும் மேகங்கள்
கை கோர்த்து நடை பழகும் !
காற்றென்னும் உளி அவைகளை
விரும்பியபோதெல்லாம் வடிவமைக்கும் !
அதில் உதிரும் மழைத்துளிகள் போட்டிக்கொண்டு
எம்மைத்தொட ஓடி வரும் !

பொன்னிற மாலை பொழுது
சமரசத்தில் இணையும் சூரியன் !
சேகரித்த அன்றைய தகவல்களை
ஆங்காங்கு பகிரும் பறவை கூட்டம் !
அலுவல்களை முடித்துக் கொண்டு
தலைவனை தொடர்ந்து கூடு திரும்பும் !
அனுபவங்களை தாலாட்டென இசைத்து
தன் குழந்தைகளை உறங்கச்செயும் !

சூரியன் முடித்த பணியை
மின்விளக்கு தொடர துவங்கும் !
விளக்குகள் ஏந்திய வாகனங்கள்
நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கும் !
வாகன வெள்ளம் கடந்தால், வரவேற்க
தெருவோரம் நின்று தெருவிளக்கும் கண்ணடிக்கும் !
இவ்விளக்குகள் செயல்புரிய மறுத்துவிட்டால்
வெளிச்சத்திற்கு வெண்ணிலா தலைமை தாங்கும் !

நகரின் எத்திசையில் மழை !
எத்திசையில் வெயில் !
நகரின் எப்பகுதியில் பசுமை !
எப்பகுதியில் வெறுமை !
இவைகளையெல்லாம் கண்டு ரசிக்க செய்தது
பன்னிரெண்டாம் தளம் !
ரசிப்பதற்கு ஏற்ப அலுவலிடம் கொடுத்தது
எமக்கு அளித்த வரம்!!!

4 கருத்துகள்:

Bhuvaneswari சொன்னது…

This is about a view from my seat in my office :)

butterfly Surya சொன்னது…

நல்லாயிருக்கு. ஓரு படத்தையும் (the view) இணைத்திருந்தால் இன்னும் நன்கு ரசித்திருக்கலாம்.

வாழ்த்துக்கள்

Bhuvaneswari சொன்னது…

நன்றி வண்ணத்துப்பூச்சியாரே! அடுத்த பதிவில் கண்டிப்பாக முயற்சிக்கிறேன்!

Goushalya Kothai Nachiar சொன்னது…

இப்படிகூட வர்ணிக்க கூடுமோ என்று வியந்தேன்.கற்பனை விரியட்டும்... பாராட்டுகள் குவியட்டும்
வாழ்த்துகள் புவி